Published : 09 Oct 2022 04:35 AM
Last Updated : 09 Oct 2022 04:35 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 அதிகரிப்பு

சென்னை

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.38,720-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.4,840-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.38,720-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,936-க்கு விற்பனையானது.

இதேபோல, நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.66-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை நேற்று ரூ.66,000-ஆக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x