

கடந்த மாதம் 24-ம் தேதி டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். டொகோமோ விவகாரத்தை சைரஸ் சரியாக கையாளவில்லை என்பதால் நீக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் டொகோமோ விஷயத்தில் எடுக்கப்பட்டவை அனைத்தும் ரத்தன் டாடாவுக்கு தெரியும் என சைரஸ் மிஸ்திரி அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற டொகோமோ முடிவெடுத்தது. ஒப்பந்தத்தின்படி டொகோமோவின் பங்குகளை விற்பதற்கு டாடா ஏற்பாடு (டிசம்பர் 2014-க்குள்) செய்திருக்க வேண்டும். ஆனால் டாடா அதனை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் டாடாவுக்கு எதிராக டொகோமோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதில் டாடாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தது.