கடந்த ஆண்டைவிட ஏற்றுமதி அதிகரிக்கும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

கடந்த ஆண்டைவிட ஏற்றுமதி அதிகரிக்கும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
Updated on
2 min read

கடந்த ஆண்டை விட, நடப்பாண் டில் ஏற்றுமதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஏற்றுமதியில் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகள் உருவாகியுள்ளன. வரும் மாதங்களின் ஏற்றுமதி வளர்ச்சியைப் பார்க்கிறபோது கடந்த ஆண்டை விட ஏற்றுமதி சதவீதம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பல துறைகளில் ஏற்றுமதி சீரடைந்துள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதியில் நாம் நிலையான இடத்தை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார். நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி சரிந்து வந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் சற்றே வளர்ச்சியை கண்டது. ஆனால் அக்டோபர் மாதத்தில் 9.59 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இது சிறிய அளவு அல்ல. நமது ஏற்றுமதி வேகமெடுத்து வருகிறது என்று கூறினார்.

நடப்பாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 15,491 கோடி டாலராக உள்ளது. 2015-16 நிதியாண் டில் 26,229 கோடி டாலர் அள வுக்கு ஏற்றுமதியானது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட் டமைப்பான எப்ஐஇஓ இந்திய ஏற்றுமதி 28,000 கோடி டாலர் என்ற இலக்கை எட்டும் என்றும் கூறியுள்ளது. இந்திய ஏற்றுமதி யாளர்கள் சர்வதேச சந்தையில் போட்டி போடும் அளவுக்கு சிறந்த முயற்சிகளை எடுத்துள்ளனர். ரூபாய் மதிப்பில் உருவாகும் ஏற்ற இறக்கம் ஏற்றுமதியை பாதிக்காது என்றும் கூறினார். சர்வதேச சந்தைகளில் தேவையை உருவாக்குவது நமது கை களில்தான் உள்ளது. எனினும் ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதி மறுமலர்ச்சி உருவாகிறது. பொரு ளாதாரமும் சில தேவைகளுக்கான உத்வேகத்தைக் கொடுக்கிறது.

சீனாவில் தொழிலாளர் களுக்கான சம்பள விகிதம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது எல்லா துறைகளுக்கும் பொருந்தாது என்றாலும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப உருவாகியுள்ள தேவைகளையும் கவனிக்க வேண்டும் என்றார் நிர்மலா சீதாராமன்.

இன்ஜினீயரிங், பெட்ரோலியம் மற்றும் ஆபரண கல் மற்றும் தங்க நகை ஆகிய துறைகளில் ஏற்றுமதி இரண்டாவது மாதமாக அக்டோபர் மாதம் 9.59 சதவீதத்தை எட்டியுள்ளது. இன்ஜினீயரிங் துறை பொருட்களில் ஏற்றுமதி 13.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆபரண கல் மற்றும் தங்க நகை துறை ஏற்றுமதி 21.84 சதவீதமாகவும், பெட்ரோலிய பொருட்கள் 7.24 சதவீதமும், ரசாயனப் பொருட்களின் ஏற்றுமதி 6.65 சதவீதமும் அதிகரித்துள்ளது.

டிசம்பர் 2014 முதல் தொடர்ச்சியாக மே 2016 வரை 18 மாதங்கள் ஏற்றுமதி சரிவைக் கண்டு வந்தது. கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்பட்ட சர்வதேச தேக்க நிலை காரணமாக ஏற்று மதியும் தேக்கமாக இருந்தது. ஜூன் மாதத்தில் ஏற்றமாக இருந்த ஏற்றுமதி அளவு மீண்டும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை சரிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in