

மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் காபி உள்ளிட்ட பானங்களுக்காக பிரத்யேக மெக்கஃபே பிராண்டை தொடங்கி இருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் மெக்டொனால்ட் உண வகங்களில் மெக்கஃபே நீட்டிக் கப்பட்டுள்ளது. கடந்த 2013 அக்டோபரில் இந்த பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. நேற்று வடபழனியில் போரம் விஜயா மாலில் தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவில் ஹார்ட் கேஸ்டில் ரெஸ்டாரன்ட்ஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்மிதா ஜாதியா கூறியதாவது: தற்போது முறைப்படுத்தப்பட்ட காபி சந்தை ரூ.2,000 கோடியாக இருக்கிறது. வரும் 2020-ம் ஆண் டுக்குள் ரூ.5,000 கோடியாக உய ரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல முறைப்படுத்தப்பட்ட ஸ்டோர்களின் எண்ணிக்கை 3,500 ஆக இருக்கிறது. இது 2020-ம் ஆண்டில் 6,200 ஆக உயரும். இதுவரை மேற்கு இந்தியாவில் கவனம் செலுத்தினோம். சென்னையில் இப்போது தொடங்கி இருக் கிறோம். சென்னையில் மேலும் சில இடங்களிலும் கோவை உள் ளிட்ட பகுதிகளிலும் மெக்கஃபே திறக்க இருக்கிறோம் என்றார்.