பிரான்சைசி தொழில் தொடங்க எளிய வழிகள்

பிரான்சைசி தொழில் தொடங்க எளிய வழிகள்
Updated on
1 min read

பிரபலமாக திகழும் நிறுவனங்களின் பிரான்சைசி எடுப்பதன் மூலம் அடிப்படை கல்வி, உயர் கல்வி, கார் சர்வீஸ், உணவகம், காபி கடை, அழகு நிலையம், கம்ப்யூட்டர் சர்வீஸ் என எல்லா முன்னணி தொழில்களையும் மேற்கொள்ள வாய்ப்புகள், தொழில்முனைவோரின் கதவைத் தட்டுகின்றன.

தேர்ந்தெடுக்கும் தொழிலையும், அதன் வியாபார வாய்ப்புகளையும் பொறுத்து அதன் முதலீட்டு தொகை நிர்ணயிக்கப்படுகிறது. சில நிறுவனங்கள் டெபாசிட் தொகையும், ராயல்டியும் வசூலிக்கின்றன.

குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பிரான்சைஸை வாங்கி விட்டால் அந்நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அப்போது தான் அந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சீராக இருக்கும். இதை மீறாமல் இருக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்பது கட்டாயமாகிறது.

அடிப்படை பயிற்சி, ஊழியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, விளம்பர உதவி போன்றவற்றை தாய் நிறுவனம் வழங்கும்.

வாடிக்கையாளர்கள் சேவையை தாய் நிறுவனமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மூலப்பொருட்கள், விளம்பரம், அலங்காரம், தொழில் தொடர்பான பயிற்சி, தேவையான கருவிகள் உள்பட அனைத்தையும் தாய் நிறுவனங்களே வழங்கி விடும்.

பொதுவாக, புதிதாக ஒருவர் தொழில் தொடங்கினால் அந்த பிராண்டை மக்கள் மனதில் நிலைக்க வைக்க நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை தொடர்ந்து செயல்பட வேண்டும்.

ஆனால், ஏற்கனவே உள்ள நிறுவனத்தின் பிரான்சைசி பெறுவதன் மூலம் நேரடியாக, தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்பது இதில் உள்ள முக்கியமான சிறப்பு அம்சம். பிரான்சைஸி தொழில்களைப் பொறுத்தவரையில் உங்கள் விருப்பத்துக்கு செயல்பட முடியாது என்பது பலவீனமான அம்சம்.

தொழிலை விரிவாக்கம் செய்யவோ, விருப்பம் போல மாற்றங்களை செய்யவோ முடியாது. ஒப்பந்தங்கள், விதிமுறைகள் இவற்றின்படியே செயல்பட முடியும். வருமானத்தின் அடிப்படையில் லாபமும் வரையறுக்கப் பட்டிருக்கும்.

இந்த அடிப்படை உண்மைகளை எல்லாம் தெரிந்து கொண்டு பிரான்சைசி வாய்ப்பு எடுத்தால் அதில் வெற்றி பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in