Published : 02 Oct 2022 04:25 AM
Last Updated : 02 Oct 2022 04:25 AM
தமிழில் இளைஞர்களுக்காக ‘விஜய் டக்கர்’ என்ற பொழுதுபோக்கு சேனலை ஸ்டார் விஜய் தொடங்குகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை ஸ்டார் விஜய் தொடங்குகிறது. இதையொட்டி வெளியான டீஸரை தொடர்ந்து, ‘ப்ரமோ’ விளம்பரமும் ஸ்டார் விஜய் மற்றும் அதன் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ‘விஜய் டக்கர்’ என்ற இந்த புதிய சேனல், ‘புதிய இளமை’ எனும் டேக்லைனுடன் இளைஞர்களுக்கான புதிய சேனலாக வருகிறது.
இன்றைய இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு பிராண்டாக, பொழுதுபோக்கு துறையில் டிரெண்ட்செட்டராக ‘விஜய் டக்கர்’ சேனல் இருக்கும். ‘விஜய் டக்கர் - இனி இது தான் டிரெண்ட்செட்டர்’ என்ற டேக்லைன் இதற்கு பொருத்தமாக இருக்கும்.
‘விஜய் டக்கர்’ சேனல், Non Fiction வகையில், திரைப்படங்கள், இசை என இளைஞர்களுக்கான முழு கலவையை கொண்டுள்ளது. இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில், தினமும் தொடர்ச்சியாக பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இதில் ஒளிபரப்பாக உள்ளன.
தமிழகத்தின் 2k கிட் (gen z) தலைமுறையினரின் கல்லூரி வாழ்வை காட்சிப்படுத்தும் ‘காலேஜ் டா’, சமூக நிகழ்வுகளை கிசுகிசுக்கும் ‘சினிமா காரம் காஃபி’ என்ற நகைச்சுவை அரட்டை நிகழ்ச்சி, ‘டிரக் மேல லக்கு’ என்ற கேம் ஷோ, சாதாரண பொதுமக்களை அழகாக்கும் ‘ஸ்டைல் ஸ்டைல்தான்’, பிரபலங்களின் வாழ்க்கையை காட்டும் ‘ஸ்டாருடன் ஒருநாள்’, ‘சம்திங் சம்திங்’ டேட்டிங் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இதில் இருக்கும்.
தமிழ் இளைஞர்களின் வாழ்க்கைமுறையை ஒட்டி உருவாக்கப்பட்டிருப்பதும், வேறு சேனல்களில் இல்லாத உள்ளடக்கம் என்பதும் இதன் சிறப்பம்சம். பார்வையாளர்களுடன் உரையாடும் வகையில் இந்த சேனலின் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இளைஞர்களுக்கான சிறப்பான பொழுதுபோக்கை வழங்கும் உற்சாகமிக்க சேனலாக ‘விஜய் டக்கர்’ இருக்கும். வரம்பற்ற பொழுதுபோக்குடன் விஜய் டக்கர் சேனல் விரைவில் தொடங்கப்படுகிறது. இது இளைஞர்களின் இதயங்களை கவரும்.
பிரித்வி மகளிர் உள்ளாடைகள், ஆரெம்கேவி யுனிக் சில்க்ஸ், வைக்கிங் பிரீமியம் உள்ளாடைகள் ஆகியவை விஜய் டக்கரின் சேனல் பார்ட்னர்கள் ஆவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT