Last Updated : 22 Nov, 2016 11:50 AM

 

Published : 22 Nov 2016 11:50 AM
Last Updated : 22 Nov 2016 11:50 AM

5.44 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி தகவல்

உயர் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்ததிலிருந்து இதுவரை வங்கிகளிலிருந்து ரூ.5,44,571 கோடி மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மட்டும் ரூ. 1,03,316 கோடி தொகையை வங்கிகளில் மாற்றியுள்ளனர். ரொக்கப் பண மாக மாற்றியதொகை ரூ.33,006 கோடியாகும். வங்கிப் பரிவர்த் தனை மூலம் மாற்றப்பட்ட தொகை ரூ.5,11,565 கோடி என தெரிவித்துள் ளது. நவம்பர் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் இந்த அளவுக்கு பண பரிமாற்றம் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்தும் ஏடிஎம்கள் மூலமாக ரூ. 1,03,316 கோடியை எடுத்துள்ளனர் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்க நடவடிக்கை நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் இத்தகைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அதை தங்களது வங்கிக் கணக்கிலோ அல்லது வங்கிகளிலோ மாற்றிக் கொள்ளும் வசதியை வங்கி செய்துள்ளது. தபால் அலுவலகங்கள், பிராந்திய மண்டல வங்கிகள், நகர்ப்புற கூட்டுறழு வங்கிகள் ஆகியவற்றில் பணம் மாற்றுவதற்கான வசதியை ஆர்பிஐ ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 50,000 வரை ஓவர் டிராப்ட்

ஓவர் டிராப்ட் மற்றும் கேஷ் கிரெடிட் கணக்கு உடையவர்கள் வாரத்திற்கு ரூ. 50,000 வரை வங்கியில் எடுத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக நடப்பு கணக்கு உடையவர்கள் வாரத்திற்கு ரூ.50,000 வரை வங்கியில் எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பு நீக்கம் திட்டம் அறிவித்த பிறகு குறிப்பிட்ட அளவு தொகை மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக ரிசர்வ் வங்கி தளர்த்தி வருகிறது. கடந்த 3 மாதங்களாக செயல்பாட்டில் உள்ள அதன்படி ஓவர்டிராப்ட், கேஷ் கிரெடிட், நடப்ப்பு கணக்கு உள்ளவர்கள் வாரத்திற்கு வங்கியிலிருந்து ரூ.50,000 வரை எடுத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த 50,000 ரூபாயும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக விநியோகிக்கப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x