

ஐடிசி நிகர லாபம் 15% உயர்வு
ஐடிசி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 15.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,186 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,891 கோடியாக இருந்தது.
நிகர விற்பனை 25.88 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் ரூ.7,338 கோடியாக இருந்த நிகர விற்பனை இப்போது ரூ.9,164 கோடியாக இருக்கிறது. சிகரெட் மூலம் கிடைக்கும் வருமானம் 18.76 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
பார்தி ஏர்டெல் லாபம் 60% உயர்வு
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 60.9 சதவீதம் உயர்ந்து ரூ.1,108 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிகர லாபம் 689 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருமானம் 13.3 சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 20,264 கோடி ரூபாயாக இருந்த நிகர வருமானம் இப்போது 22,962 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானம் 11.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது.