சோளம் விலை என்ன?

சோளம் விலை என்ன?
Updated on
1 min read

சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கும் வகையில் சோளத்துக்கான விலை குறித்த கணிப்பை திருச்சியில் உள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் வணிக மேம்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தியாவில்சோளம் பயிரிடும் பரப்பு 1961 முதல் 2011 வரையிலான காலத்தில் 18.2 மில்லியன்ஹெக்டேரிலிருந்து 6.3 மில்லியன் ஹெக்டேராக குறைந்துள்ளது. மேலும், இதன்உற்பத்தி 8 மில்லியன் டன்களிலிருந்து 6 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது. ஆனால் உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 440 கிலோவிலிருந்து 961 கிலோவாகஉயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தானியம் மற்றும் தீவனப் பயிராக சோளம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் சோளம் சாகுபடியில் திண்டுக்கல், திருச்சி, கோவை, கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 76 சதவீதம் அளவுக்கு நடைபெறுகின்றன. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பாரம்பரிய விதை வகைகளான மஞ்சள் சோளம், வெள்ளைச் சோளம், கரிச் சோளம், காரடிச் சோளம் ஆகியவையும்,மேலும் சி 030, பிஎஸ்ஆர்ஐ மற்றும் சிஎஸ்எச் 5 ஆகிய ரகங்களும் பயிரிடப்படுகின்றன.

தமிழகத்தில் ஜூலை - அக்டோபர், அக்டோபர் - பிப்ரவரி மற்றும் கோடைப்பருவத்திலும் சோளம் சாகுபடி நடைபெறுகிறது. சந்தை மற்றும் பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஒரு கிலோ சோளத்துக்கு ரூ.18 மற்றும் ரூ.19 விலை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய மையத்தின் துணை இயக்குநரை 94435 93971 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in