Last Updated : 18 Nov, 2016 11:09 AM

 

Published : 18 Nov 2016 11:09 AM
Last Updated : 18 Nov 2016 11:09 AM

வணிக நூலகம்: தாய்மையே தலைமை

சிமோன் சினெக் (SIMMON SINEK) என்ற இந்த நூலாசிரியர் எழுதிய இரண்டு புத்தகங்கள் இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மூன்றாவதாக லீடர்ஸ் ஈட் லாஸ்ட் என்கிற தலைமை பண்புகளை பற்றிய ஒரு அருமையான நூல் அறிமுகமாகிறது.

மெழுகாய் உருகி மற்றவரை காப்பது மட்டும் தலைமை அல்ல. நம் பிக்கை என்பது நிறுவனங்களில் மிக மிக முக்கியம். நம்பிக்கையை வளர்க்க உண்மையை விதைக்க வேண்டும்.

தற்பெருமை, பொய், தன்னைப் பற்றிய சிந்தனை மிகுந்த தலைவர்கள் அதேபோன்ற குணாதிசயம் கொண்ட பணியாளர்களை தான் உருவாக்க முடி யும். உண்மையைப் பேசும் மேலதிகாரி, உண்மையை பேசும் பணியாளர் களை வளர்க்கும் கலாசாரம் மிக முக்கியமானது. இது ஒன்றும் விண்வெளி விஞ்ஞானம் அல்ல.

ஆணை இடுவது மட்டுமே தலைமைத்துவம் அல்ல. மேலதிகாரி என்பவர் வழிகாட்டவும் எண்ணத்தை கூறவும் இலக்கை அடையவும் செய்ய வேண்டிய செயல்களை மட்டுமே கூற வேண்டும். மற்றவர்களின் எண்ணங்களை வளர்க்க வேண்டும். பொறுப்பு என்பது சொல்வதை செய் வது அல்ல, அதற்கு பெயர் கீழ்படி தல். மாறாக பொறுப்பு என்பது சரி யான செயலை சரியாக செய்வது. பணியாளர்கள் விரும்பாத நிறு வனத்தை எந்த வாடிக்கையாளரும் விரும்ப மாட்டார்.

தலைமை

எதிர்காலத்தில் சாதனை புரியும் எண்ணங்களையும், திறனை உயர்த் தும் செயல்களை செய்யும் பணி யாளர்களையே விரும்புகிறார்கள். நிறுவனத்தின் உள்ளிருக்கும் அபாயங் களை சமாளிக்கும் பொழுது வெளியி லிருந்து வரும் அபாயங்களை எளிதாக ஊதி அணைத்து விடலாம். ஒரு மோசமான பொருளாதாரம் பணி யாளர்களுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும். ஆனால் பொருளா தார மந்த நிலையையோ, மோசமான நிலைமையையோ சுட்டிக்காட்டி நிறுவனத்தை மூடுவது தலைமையின் பண்பு அல்ல. பணி பகிர்ந்து மற்றவர் களை ஈடுபாட்டோடு செயல்பட வைக் கும் தலைவர், பணியாளர்களை தன்னை சார்ந்து இருக்கச் செய்வது இல்லை. தலைமையை சாராது பணி யாற்றும் பணியாளர்கள் தங்களையும், நிறுவனத்தையும் இடர்பாடுகளில் இருந்தும், பேரழிவிலிருந்தும் மீட்டு எடுக்கிறார்கள்.

அன்பே தேவை

நிறுவனத் தலைவர்கள் கூறும் வார்த்தைகளும், நிறுவனத்தின் ஏற்ற இறக்கத்திற்கு பெரும் அளவு பங்கு வகிக்கின்றது. 2011-ம் ஆண்டு அமெரிக்க வங்கி ஒன்று கடன் அட்டைகளை பயன்படுத்துபவர்கள் மாத கட்டணமாக ஐந்து டாலர்கள் செலுத்த அறிவுறுத்தியது. வாடிக்கை யாளர்களின் ஆர்ப்பரிப்பும், எழுச்சிமிக்க எதிர்ப்பும் ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு நிறுவனம் வாடிக்கையாளர்களை நோக்கி தலைவணங்கியது. அவ்வாறு மறுத்து அறிக்கை விடும் பொழுது ஏனோ தானோ என்றோ அல்லது அவர்கள் வேண்டாம் அதனால் செய்யவில்லை என்பதை போலவும் எழுதப்பட்டிருந்த வாசகங்களை வாடிக்கையாளர்கள் ரசிக்கவில்லை. மாறாக மேலே குறிப்பிட்ட படி உண்மையை கூறி நெருக்கத்தை ஏற்படுத்தி அளவு குறைந்த அதிகார வார்த்தைகளால் நிலைமை சரிசெய்திருக்க முடியும். இந்த பக்கங்கள் புத்தகத்தில் படிப்பதற்கு மிகவும் ஆர்வத்தை தூண்டும்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்த நிறுவனத் தலைவர்கள் சில நேரங்களில் பணியாளர்களையும் இழக்க நேரிடும், மற்ற நேரங்களில் பணியையே காவுக்கொடுக்க வேண்டியிருக்க வேண்டும். நேரமும் சக்தியையும் சேர்த்துக்கொடுக்கும் தலைவர்கள் பணத்தை கொடுக்கும் தலைவர்களை விட அதிகம் விரும்பப்படுகிறார்கள். ஊழலில் திளைக்கும் தலைமை நிர்வாக அதிகாரி, தொண்டு நிறுவனங்களுக்கு பொருள் உதவி வழங்குவதை யாரும் ரசிக்க மாட்டார்கள். மாறாக கேலி பேசுவார்கள்.

அதிகார படிக்கட்டுகளில் சரிவு ஏற்படும் நேரத்தில் தன் கீழ் பணி யாற்றுபவர்களை பாதுகாக்கும் தலை வர்கள் மிகப்பெரிய தலைவர்களாக எண்ணப்படுகிறார்கள். நேருக்கு நேராக பணி செய்யும் இடத்தை பார்வையிட்டு ஊக்க வார்த்தைகளை ஓங்கி பேசும் தலைவர்கள் பணி யாளர்களால் பெரிதும் விரும்பப்படு கிறார்கள். உடன் பணிபுரிபவர்களை அணுசக்தி கப்பலில் பணியாற்றும் மாலுமிகளை போல் எண்ண வேண்டும். ஏனென்றால் நிலைமை மோசமாகும் பொழுதோ, கட்டுக்க டங்காமல் போகும் பொழுதோ வேறு யாரையும் முன் நிறுத்தி நிலைமையை சீர் செய்ய இயலாது. அதே போன்று நிறுவனங்களிலும் இடம் மாற்றங்களும், தற்காலி பணி நீக்கமும் குழப்பமான, மோசமான சூழ்நிலைகளில் தீர்வாக அமையாது.

கனவும் தொலைநோக்கும்

இன்றைக்கும் நிறுவனங்கள் மார்டின் லூதர் கிங் பேசிய பேச்சை தான் எடுத்துக்காட்டாக கூறுக்கின்றன. எல்லோரும் வாருங்கள் எதிர்போம் என்று கூறவில்லை. மாறாக எனக்குள் ஒரு கனவு இருக்கிறது அந்த கனவை நினைவாக்க அனைவரும் வாருங்கள் இணைந்து செயல்படுவோம் என்று அறைகூவல் விடுத்தார். தலைவர்கள் வாருங்கள் போராடலாம் என்றால் வருவதற்கு யாரும் தயாராக இல்லை. மாறாக இலக்கை காட்டி எண்ணத்தை கூறி தொலைநோக்கு பார்வையோடு நம்பிக்கையை இணைக்கும் பொழுது தொண்டர்கள் தோள் கொடுத்து வெகுதூரம் வர தயாராகிறார்கள்.

ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குடும்பமே. ஒவ்வொரு பணியாளரும் குடும்ப உறுப்பினராகவே கருதப்பட வேண்டும். இலக்கு எண்ணிக்கையை அடைவதற்காக மனிதர்களையும் எண் ணங்களையும் தியாகம் செய்வதை விட, எண்களை தியாகம் செய்து மனிதர்களையும் எண்ணங்களையும் மறுமலர்ச்சிக்கு கொண்டு செல்லும் பொழுது புத்துணர்ச்சியே பெரிதும் தேங்கி நிற்கிறது. மேலாளர்களும், மேலதிகாரிகளும் குறுகிய கால இலக்கை எப்போதும் மற்றவர்களிடம் திணிக்கிறார்கள். ஆனால் தலைவர் களோ தொலைநோக்கு இலக்கை தாய்மை உணர்வுகளால் தூண்டி மேல் நோக்கி செலுத்துகிறார்கள். மற்றவர்களை தக்க வைப்பதும் மேல்நோக்கி செலுத்துவதும் தலைமையின் உணர்வுகளுக்கு தாய்மையின் பங்களிப்பாகும்.

தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x