Last Updated : 21 Nov, 2016 10:59 AM

 

Published : 21 Nov 2016 10:59 AM
Last Updated : 21 Nov 2016 10:59 AM

பிளிப்கார்ட்டில் இனி மளிகைப் பொருட்கள்!

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப் கார்ட் விரைவில் மளிகைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. மேலும் ஆன்லைன் மூலம் பர்னிச்சர்கள் விற்பனையைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு முதல் மளிகைப் பொருட்களை விற் பனைக்கு கொண்டு வர திட்ட மிட்டிருக்கிறோம். மேலும் மூன்று ஆண்டுகளில் அதை விரிவுபடுத் தவும் திட்டமிட்டுள்ளோம். மளிகைப் பொருட்கள் விற்பனை என்பது லாபகரமான தொழில்தான். ஆனால் அது மிக கடினம் என்று பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அமேசான் நிறு வனம் முக்கியமான நகரங்களில் சோதனை முயற்சியாக மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது அதிக மக்கள் துணிகள் முதல் ஸ்மார்ட் போன்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலமாக வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியா வில் ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை 2025-ம் ஆண்டில் 18,800 கோடி டாலராக உயரும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் கணித்துள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் பிளிப்கார்ட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் பிரிவில் பேஷன் பொருட்கள் இருக்கும். ஆனால் பேஷன் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட் களை விட அடுத்த ஆறு ஆண்டு களில் மளிகைப் பொருட்கள் அதிகமான விற்பனையாக சாத்தியங்கள் உள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பேஷன் பிரிவு நிறுவனமான மிந்த்ரா, ஜபாங் நிறுவனத்தை 7 கோடி டாலர் தொகைக்கு கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் தற்போது ஆன் லைன் பர்னிச்சர் விற்பனையை மேம்படுத்துவதற்கு உண்டான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் புதிய பர்னிச்சர் பொருட்கள் அறிமுகப் படுத்தப்படும் என்று பின்னி பன்சால் தெரிவித்தார்.

சமீபத்தில் இந்திய நிறுவனங் களான அர்பன்லேடர் மற்றும் பெப்பர்பிரை போன்ற நிறுவனங் கள் ஆன்லைன் பர்னிச்சர் விற்பனையை தொடங்கியுள்ளன. ஆனால் இன்றளவும் மக்கள் பாரம்பரியமான கார்பெண்டர் களிடமும் உள்ளூர் கடைகளிலும் பர்னிச்சர் பொருட்களை வாங்கு கின்றனர். அடுத்த 4 ஆண்டுகளில் பிளிப்கார்ட் நிறுவனம் பொதுப் பங்கு வெளியிடுவதற்கு பரிசீலித்து வருகிறது என்று பின்னி பன்சால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x