

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, நாடு முழுவதும் இருக்கும் 1.55 லட்சம் தபால் நிலையங்களில் ரூ.32,631 கோடி டெபாசிட் வந்துள்ளது. மேலும் 3,680 கோடி ரூபாய்க்கு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொடுக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 10 முதல் 24-ம் தேதி வரை இந்த தொகை மாற்றப்பட்டிருப்பதாக தபால் துறை செயலாளர் பிவி சுதாகர் தெரிவித்தார். மொத்தம் இருக்கும் 1.55 லட்சம் தபால் நிலையங்களில் 1.30 லட்சம் தபால் நிலையங்கள் கிராமப்புறத்திலும், மீதமுள்ள 25,000 தபால் நிலையங்கள் நகர்புறங்களிலும் இருக்கின்றன. பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு இவை முக்கிய பங்கு வகித்தன. இந்த காலகட்டத்தில் ரூ.3,583 கோடி தபால் நிலையங்களில் இருந்து வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.