

புகையிலை சார்ந்த துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு (எப்டிஐ) மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை மத்திய அமைச்சரவை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.
ஏற்கெனவே சிகரெட் அட்டைப் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்கள் பெரிய அளவில் வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நிய நேரடி முதலீடுகள் புகையிலை சார்ந்த துறைகளில் மேற்கொள்வதை முற்றிலுமாக தடை செய்யலாம் என்பதற்கான பரிந்துரையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பரிந்துரையில் மத்திய சுகாதார அமைச்சகம், நிதி அமைச்சகம் உள்ளிட்டவற்றின் ஆலோசனைகளும் பெறப்பட்டு அவையும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
தற்போது தொழில்நுட்ப கூட்டு, பிரான்சைஸி லைசென்ஸ், டிரேட்மார்க், மேலாண்மை ஒப்பந் தம் உள்ளிட்டவைகள் புகை யிலை சார்ந்த தொழிலில் அனு மதிக்கப்படுகின்றன. இருப்பினும் சுருட்டு, சிகரெட் மற்றும் புகை யிலை சார்ந்த பொருள் தயா ரிப்பதற்கு அனுமதிக்கப்படுவ தில்லை.
தடை விதிக்கும் தீர்மானத் துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டால் அது உள்நாட்டில் சிகரெட் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரும் பின்னடைவாக இருக்கும்.
தற்போது புகையிலை சார்ந்த துறையில் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்படும் துறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும். இதன்படி புகையிலை சார்ந்த தொழிலில் அந்நிய நேரடி முதலீடு முற்றிலுமாக தடை செய்யப்படும். இதன் மூலம் இத்தொழிலில் மறைமுகமாக வரும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் தடை விதிக்கப்படும்.
இத்தகைய தடை விதிப்பின் மூலம் புகையிலை உபயோகத் தைக் குறைக்கும் நடவடிக்கை யில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்ற பாதையில் செல் வதை உணர்த்துவதாக அமையும். மத்திய அரசின் இந்த முடிவுக்கு சிகரெட் தயாரிப்பு நிறுவனமான காட்ஃபிரே பிலிப்ஸ் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.