ரூ.1,000 கோடி சொத்து சேர்த்த 19 வயது ‘ஸெப்டோ’ நிறுவனர்

ரூ.1,000 கோடி சொத்து சேர்த்த 19 வயது ‘ஸெப்டோ’ நிறுவனர்
Updated on
1 min read

புதுடெல்லி: ஐஐஎப்எல் வெல்த் நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

மிக விரைவாக மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் ஸெப்டோ செல்போன் செயலியின் நிறுவனர்களான கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலிச்சா ஆகியோர் இளம் தொழில் முனைவோர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளனர்.

கைவல்யா தனது 19 வயதிலேயே ரூ.1,000 கோடி நிகர சொத்து மதிப்புடன் பட்டியலில் 1036-வது இடத்தில் உள்ளார். ஸெப்டோவின் மற்றொரு இளம் நிறுவனரான ஆதித் பலிச்சா ரூ.1,200 கோடி நிகர சொத்து மதிப்புடன் 950-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துபாயில் வசித்து வந்த இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். இவர்கள் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்யும் கிரானாகார்ட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை மும்பையில் தொடங்கினர்.

இது, 2020 ஜூன் முதல் 2021 மார்ச் வரை செயல்பாட்டில் இருந்தது. அதன் பின்பு, 60 மில்லியன் டாலர் நிதி திரட்டி 2021 ஏப்ரலில் ஸெப்டோ நிறுவனத்தைத் தொடங்கினர். நடப்பாண்டு மே நிலவரப்படி இவர்களது ஸெப்டோ நிறுவனத்தின் மதிப்பு ரூ.7,200 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in