மிதமான வரி இருந்தால் கறுப்பு பணம் இருக்காது: ஆதி கோத்ரேஜ் கருத்து

மிதமான வரி இருந்தால் கறுப்பு பணம் இருக்காது: ஆதி கோத்ரேஜ் கருத்து
Updated on
1 min read

வரி விகிதங்கள் நியாயமாகவும் மிதமாகவும் இருக்கும் பட்சத்தில் கறுப்புப்பண பதுக்கலை தடுக்க முடியும் என ஆதி கோத்ரெஜ் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது: தொழிலில் ஒவ்வொரு பகுதியிலும் அரசாங் கத்தின் அனுமதி தேவையாக இருக்கிறது. இது ஊழலுக்கு காரணமாக இருக்கிறது. இதனை நெறிபடுத்தும்போது ஊழல் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் நேரடி வரிகள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மிதமாகவும் நியாயமாக வும் இருக்கும்பட்சத்தில் பெரும் பாலானவர்கள் தாமாக முன்வந்து வரியினை செலுத்துவார்கள். பண மதிப்பு நீக்கம் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் சிறந்த பயனை கொடுக்கும். இதன் மூலம் கறுப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. ஆனால் எதிர்காலத்தில் மக்களின் கறுப்பு பண பரிவர்த்தனை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பலர் நேர்மை யாக மாறுவதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் நேரடி வரிகளை குறைக்க வேண்டும்.

வரி விகிதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வரியை ஏன் கட்ட வேண்டும் என நினைத்து அதனை தவிர்க்க தோன்றும். கார்ப்பரேட் வரி 17 சதவீதமாக இருக்க வேண்டும் என இந்திய தொழிலகக் கூட்டமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது.

அதிகாரம் ஒரிடத்தில் குவியும் போது தொழில்புரிவது கடினமாகிக் கொண்டே இருக்கும். மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்தும் போது ஊழல்குறையும். ஊழல் குறைவது மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சியும் உயரும். ஒவ்வொரு விஷயத்துக்கும் அனு மதி வாங்க வேண்டி இருக்கிறது. இதனை தானியங்கி முறையில் செய்யும் பட்சத்தில் நேரம் மீதமாகும். லஞ்சமும் கொடுக்க தேவையில்லை. விதிமுறைகளை மீறும்பட்சத்தில் தண்டனை கொடுக்கலாம்.

தேர்தல் செலவுகளை அரசாங் கமே ஏற்கலாம். அப்படி ஏற்கும் பட்சத்தில் எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நிதி பெறவேண்டிய அவசியம் இல்லை. பணமதிப்பு நீக்கம் முக்கியமானது என்றாலும் கூட, அதைவிட சரக்கு மற்றும் சேவை வரி முக்கியம் என நினைக்கிறேன் என ஆதி கோத்ரெஜ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in