

வேளாண் பொருள்கள் வீணாவதைத் தடுக்க புதிய தொழில்நுட் பங்களை ஊக்குவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட தட்பவெப்ப சூழலில் உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் உணவு பதப்படுத் தல் துறைச் செயலர் அவினாஷ் கே. வத்ஸவா கூறினார்.
விவசாயப் பொருள் விளைச்சலுக்குப் பிறகு அதை சரிவர பாதுகாக்கப்படாமல் வீணாகிறது. இவ்விதம் ஆண்டுதோறும் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் வீணாகிறது. இவற்றை பாதுகாக்க புதிய தொழில்நுட் பத்தை அரசு ஊக்குவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். உணவு தானி யங்களை பாதுகாக்க நவீன கிடங்கு வசதிகளை மானிய உதவியோடு உருவாக்க அரசு உதவுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
உணவு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை யில் விளைச்சலுக்குப் பிறகு உணவு தானியங்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதற்கு தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். இத்தகைய நவீன தொழில்நுட்பங்களால் பொருள்களை பாதுகாப்பதோடு பொருள்களின் தரத்தை மேம்படுத்தவும் முடிகிறது.
அறுவடைக்குப் பிந்தைய உணவு தானியங்கள் வீணாகும் அளவு தற்போது ரூ. 1 லட்சம் கோடியாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும். வீணாவதைத் தடுப்பதன் மூலம் நமது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும்.
புஹ்லர் தானிய தொழில்நுட் பத்தை பயன்படுத்துவதன் மூலம் பருப்பு வகைகளில் ஆயுள் காலத்தை அதிகரிக்கச் செய்ய முடிகிறது. அதேபோல ஜேவிஎம் தொழில்நுட்பம் மூலம் சிட்ரஸ் பழங்களை காக்க முடிகிறது.
இந்தியாவில் பருப்புக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே புஹ்லர் தொழில்நுட்பத்தை பின்பற்றலாம். மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இத்தகைய நுட்பத்தை சிறிய அளவில் பயன்படுத்துகின்றனர். இத்தகைய தொழில்நுட்பத்தை அரசும் ஊக்குவிக்கிறது என்றார்.
நவீன உணவு தானிய பாதுகாப்பு கிட்டங்கிகள் இப்போது பல இடங்களில் உருவாகி வருகிறது. இதை அமைக்கும் பணியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள் ளன. இதன் மூலம் உணவு தானியங்கள் வீணாவது குறையும்.
அறுவடைக்குப் பிறகு வீணாகும் உணவு தானியங்கள் குறித்து புதி தாக ஒரு கணக்கீடு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது குறிப்பிடப்படும் ரூ. 1 லட்சம் கோடி நஷ்டமானது 2014-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீடாகும். இதை தற்போதைய நிலவரத்துக்கேற்ப மதிப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக வும் அவர் கூறினார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வேளாண் ரசாயன நிறுவனங்கள் நடத்தும் இக்கருத்தரங்கு கடந்த முறை துருக்கியில் நடைபெற்றது. வேளாண் ஆராய்ச்சிக்கான கவுன் சில் இக்கருத்தரங்கை நடத்து கிறது.