

உயிரித் தொழில்நுட்பத் துறையில் அரசு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு செய்ய வேண்டும் என்று இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 2025-ம் ஆண்டில் இத்துறையின் வளர்ச்சி 10,000 கோடி டாலர் அளவுக்கு வளர்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.