கருத்துக் கணிப்பில் ஹிலாரி முன்னிலை: பங்குச் சந்தைகள் ஏற்றம்

கருத்துக் கணிப்பில் ஹிலாரி முன்னிலை: பங்குச் சந்தைகள் ஏற்றம்
Updated on
1 min read

வாரத் தொடக்க நாளான நேற்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலின் கடைசி கட்ட கருத்துக் கணிப்பில் ஹிலாரி முன்னிலையில் உள்ளதால் சந்தையின் போக்கு மாறியுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் முக்கிய பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்து 27458 புள்ளிகளில் சந்தை முடிந்தது. முன்னதாக வர்த்தக நேரத்தில் 27559 புள்ளிகள் வரை ஏற்றம் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 63 புள்ளிகள் உயர்ந்து 8497 புள்ளிகளில் முடிந்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் வங்கித் துறை குறியீடு அதிக ஏற்றம் கண் டது. லுபின், ஹிண்டால்கோ, அர பிந்தோ பார்மா பங்குகள் 5 சதவீதத் துக்கு மேல் லாபம் கண்டன. பார்தி இன்பிராடெல், டாடா மோட்டார்ஸ், டிசிஸ் பங்குகள் 2 சதவீதத்துக்கும் அதிகமாக நஷ்டம் கண்டன. சர்வதேச பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in