

தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. ஜூன் மாதம் 27-ம் தேதிக்கு பிறகு நிப்டி 8100 புள்ளிகளுக்கு சரிந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி மற் றும் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பு ஆகிய காரணங்களால் முதலீட் டாளர்கள் எச்சரிக்கையாக இருப்ப தால் சந்தையில் விற்கும் போக்கு தொடர்ந்து இருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்னும் அறிவிப்பு நடுத்தர காலத்தில் பொரு ளாதாரத்தில் எதிர்மறை விளைவு களை உருவாக்கும் என வல்லு நர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
சென்செக்ஸ் 71 புள்ளிகள் சரிந்து 26227 புள்ளியிலும், நிப்டி 31 புள்ளிகள் சரிந்து 8079 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.4 மற்றும் 0.6 சதவீதம் சரிந்து முடிவடைந்தன.
இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் தொடர்ந்து அந் நிய முதலீடு வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவினாலும் இறுதியில் சந்தை சரிவில் முடிவடைந்தது. கடந்த நான்கு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1289 புள்ளிகள் சரிவடைந்திருக்கிறது.
30 பங்குகள் இருக்கும் சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் சரிந்தும் 14 பங்குகள் உயர்ந்தும் முடிவடைந்திருக்கிறது. அதிகபட்சமாக பார்தி ஏர்டெல் பங்கு 4.26 சதவீதம் சரிந்திருக்கிறது. அதனை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ், கோல் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹீரோமோட்டோ கார்ப், ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் மற்றும் மாருதி ஆகிய பங்குகள் சரிந்தன. இருந்தாலும் டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், கெயில், சிப்லா, என்டிபிசி மற்றும் ஹெச்யுஎல் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.
துறைவாரியாக பார்க்கும் போது டெலிகாம் குறியீடு 2.45% சரிந்தது. அதனை தொடர்ந்து டெக்னாலஜி, ஐடி, நிதிச்சேவைகள், வங்கி ஆகிய குறியீடுகள் சரிந்தன. மின்சாரம், உலோகம், எண்ணெய் எரிவாயு மற்றும் ஹெல்த்கேர் குறியீடுகள் சிறிதளவு உயர்ந்து முடிந்தன. மொத்தம் 1,671 பங்குகள் சரிந்தும், 943 பங்குகள் உயர்ந்து 158 பங்குகளில் மாற்றம் இல்லாமலும் முடிந்தன.
விரைவில் வட்டி உயர்வு: ஏலன்
அமெரிக்க மத்திய வங்கி விரைவில் வட்டியை உயர்த்தும் என பெடரல் ரிசர்வ் கவர்னர் ஜெனட் ஏலன் சூசகமாக தெரிவித்திருக்கிறார். பொருளாதாரம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. அனைவருக்கும் வேலை வாய்ப்பு மற்றும் 2 சதவீத பணவீக்க இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலைமை சரிவடைய வாய்ப்புகள் குறைவு, அதனால் வட்டி உயர்வு இருக்க கூடும் என்றார்.