Published : 17 Sep 2022 05:20 AM
Last Updated : 17 Sep 2022 05:20 AM

குஜராத் நபர் டிமேட் கணக்கில் தவறுதலாக ரூ.11,677 கோடி வரவு - ரூ.2 கோடி முதலீடு செய்து லாபம் பார்த்தார்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சாகர். இவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில், அவரது பங்குச் சந்தை முதலீட்டுக்கான டிமேட் கணக் கில் கடந்த ஜூலை 26-ம் தேதி ரூ.11,677 கோடி வரவாகி இருந்தது.

இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது, ஏன் வந்தது என்பது குறித்தெல்லாம் அவர் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. உடனடியாக, அதில் ரூ.2 கோடியை எடுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். அந்த முதலீடு வழியாக அதே நாளில் ரூ.5 லட்சம் லாபம் ஈட்டினார். இதற்கிடையில், இரவு 8.30 மணி போல அவரது கணக்கிலிருந்த பணத்தை அவரது வங்கி திரும்பப்பெற்றது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நிகழ்ந்துவிட்டதாக வங்கி அவருக்கு தெரிவித்தது. கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ரூ.11,677 கோடி ராமேஷ் சாகர் கணக்கில் இருந்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் தாரன் ஜேம்ஸ் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.3.95 லட்சம் கோடி (50 பில்லியன் டாலர்) வரவானது. இதையடுத்து அவர் உலக பில்லியனர் பட்டியலில் 25-வது இடம் பிடித்தார். அந்தப் பணம் தவறுதலாக வரவாகியுள்ளது என்பதை அறிந்த அவர், உடனே தனது வங்கியைத் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவித்தார். அதையடுத்து அவரது கணக்கில் வரவாகிய பணத்தை வங்கி திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x