Published : 17 Sep 2022 03:48 AM
Last Updated : 17 Sep 2022 03:48 AM

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.432 குறைந்தது - நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,608-க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626-க்கும், பவுனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,008-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.40,224-க்கு விற்பனையானது.

ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.432 குறைந்திருப்பதால், நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.61.60-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.61,600-க்கும் விற்பனையானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x