

மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹெச்டிசி நிறுவனத்தின் தெற்கு ஆசிய மற்றும் இந்திய பிரிவு தலைவர். 2011-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2007-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மோட்டோரோலா நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவராக இருந்தவர்.
2006-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் புதிய பொருட்கள் பிரிவின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை நெக்ஸ்டெல் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் உத்திகள் வகுக்கும் குழுவில் உறுப்பினராகவும், இன்கோட் வொயர்லஸ் நிறுவனத்தில் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்திய தொழில்நுட்ப கழகத்தில் எலெக்ட்ரிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.