Last Updated : 14 Nov, 2016 10:33 AM

 

Published : 14 Nov 2016 10:33 AM
Last Updated : 14 Nov 2016 10:33 AM

டாடா - மிஸ்திரி விவகாரம்: டிசிஎஸ் செயல்பாடுகள் பெரிதாக பாதிக்காது- வல்லுநர்கள் கருத்து

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்கப்பட்ட பிறகு, புதிய தலைவரைத் தேடும் பணி நடந்து வருகிறது. டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சந்திர சேகரன் டாடா சன்ஸ் தலைமை பொறுப்புக்கு நியமனம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஒருவேளை குழுமத்தலைவராக நியமனம் செய்யப்பட்டால் டிசிஎஸ் செயல்பாடுகள் பெரிதாக பாதிக்காது என வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

டிசிஎஸ் நிறுவனத்தின் வாடிக்கை யாளர்கள் நிலைத்தன்மையை எதிர்பார்ப்பார்கள். சந்திரசேகரன் தலைமைப் பொறுப்புக்கு வரும் பட்சத்தில் குறுகிய காலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கிரேகெளண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைமை அதிகாரி சன்சிட் விர் கோஜியா கூறியிருக்கிறார். மேலும் இவர் தலைமையில் போட்டி நிறுவனங்களை விட டிசிஎஸ் சிறப்பாக செயல்பட இவர் காரணம் என்று குறிப்பிட்டார்.

பெரிய பாதிப்பு இல்லை

டிசிஎஸ் நிறுவனம் சுதந்திரமாக செயல்படும் நிறுவனம். அந்த நிறுவனம் வசம் போதுமான நிதி இருக்கிறது. தெளிவான திட்டங்களும் இருக்கிறது என்பதால் இயக்குநர் குழுவில் நடக்கும் பிரச்சினைகளால் நிறுவனத்துக்கு பாதிப்பு இருக்காது என கார்ட்னர் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் அருப் ராய் தெரிவித்தார். ஒருவேளை அவர் குழுமத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டாலும் சிறிய பாதிப்பு மட்டுமே இருக்கும் என்றும் கூறினார்.

முன்பு தலைவராக இருந்த மிஸ்திரி, டிசிஎஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடன் தினசரி நடவடிக்கைகளைக் கவனிக்க வில்லை என்பதால் இது பிரச்சினை இல்லை என கோடக் செக்யூரெட்டீஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் தீபன் ஷா தெரிவித்தார்.

பண்ட் நிறுவனங்களின் கவலை

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சுமார் ரூ.20,000 கோடி அளவுக்கு டாடா குழும நிறுவனங்களின் முதலீடு செய்துள்ளன. அதனால் டாடா குழுமத்தில் நடந்து வரும் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வருவதாக முன்னணி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் பண்ட் மேனேஜர் ஒருவர் தெரிவித்தார். இதனைக் கண்காணிக்க மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சார்பாக 19 நபர்கள் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் பல நிறுவனங்களின் முதலீட்டு அதிகாரிகள் இருக்கின்றனர். டாடா குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடு நீண்ட காலத்துக்குப் பிரச்சினை இல்லை என்றாலும் நடுத்தர காலத்தில் ஏற்பட்டிருக்கும் ஏற்ற இறக்கங்களைத் தடுக்க வேண்டும் என இந்த குழுவில் உள்ள ஒரு பண்ட் மேஜேனர் தெரிவித்தார்.

ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, பிராங்க்ளின் டெம்பிள்டன் மற்றும் ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட்கள் டாடா குழுமத்தில் கணிச மான முதலீட்டை செய்துள்ளன. பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியும் டாடா குழும நிறுவனங் களில் கணிசமாக முதலீடு செய்துள்ளது.

மிஸ்திரி நீக்கப்பட்டபிறகு பட்டியலிடப்பட்ட டாடா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.50,000 கோடிக்கு மேல் சரிந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x