அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 ரூபாய் வெளியீடு

அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 ரூபாய் வெளியீடு
Updated on
1 min read

அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நாடாளுமன்றம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் நேற்று புதிய 500 ரூபாய் வெளியிடப் பட்டதாக ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய மூத்த குடிமக்கள், பெண்களுக்கு தனியாக சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்க, வங்கிகளை வலியுறுத்தியுள்ளதாக அரசு தரப்பு மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் தற்போதைய நிலையில் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பெற முடியாத நிலையே உள்ளது. ரூபாய் தாள்களின் அளவுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாறுதல்கள் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த புதிய 500 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம் பெற்றுள்ளது.

தூய்மை இந்தியா இலச்சினையுடன், அச்சடிக்கப்பட்ட ஆண்டான 2016 எனவும் குறிப்பிடப் பட்டிருக்கும். சாம்பல் வண்ணத்தில் உள்ளது. பழைய 500 ரூபாய் நோட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பல பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த நோட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in