

புதுடெல்லி: போன்பே, கூகுள்பே உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை பாதுகாக்கும் வகையில் அவர்களின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் அசல் எண்ணுக்குப் பதிலாக மாற்று எண்ணை உருவாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இந்த மாற்று எண் ‘டோக்கன்’ என்று அழைக்கப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான அவகாசம் வரும் செப். 30-ல் முடிய உள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் 80% கார்டு (1.4 கோடி) எண்களை டோக்கன் முறைக்கு மாற்றியுள்ளதாக போன்பே தெரிவித்துள்ளது.