

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) ரூ. 1,200 கோடியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு வங்கியின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
தகுதிவாய்ந்த நிறுவனங் களுக்கு ஒதுக்கீடு (க்யூஐபி) மூலம் இத்தொகையை திரட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கியின் 14-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப் பட்டதாக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) அனுமதிக்கும்பட்சத்தில் தகுதிவாய்ந்த நிறுவனங் களுக்கு பங்குகளை ஒதுக்க அனுமதிப்பது என இக்கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம். நரேந்திரா, வாராக் கடன் வசூலில் வங்கி தீவிரம் காட்டி வருவதாகவும், இதனால் வாராக் கடன் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் கூறினார். வங்கியின் சொத்து அளவை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவ தாகவும் அவர் கூறினார்.