ஆஸ்திரேலியாவில் அதானி சுரங்கத் திட்டத்தை தடுக்க முயன்ற வெளிநாட்டு குழுக்கள்: விக்கி லீக்ஸ் தகவல்

ஆஸ்திரேலியாவில் அதானி சுரங்கத் திட்டத்தை தடுக்க முயன்ற வெளிநாட்டு குழுக்கள்: விக்கி லீக்ஸ் தகவல்
Updated on
1 min read

இந்தியாவைச் சேர்ந்த அதானி குழு மம் ஆஸ்திரேலியாவில் மேற் கொள்ள உள்ள சுரங்கத் திட்டத் துக்கு வெளிநாட்டு நிதியில் இயங் கும் தன்னார்வ குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட் டத்தை தடுக்கவும் அவை முயற்சித் துள்ளன. விக் கிலீக்ஸ் இணையதள த்தில் இத்தகவல் வெளியாகி யுள்ளது.

அதானி குழுமம் இங்கு 2,170 கோடி டாலர் மதிப்பிலான சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது. கடும் போராட் டத்துக்கு இடையே இத்திட்டத்துக் கான அனுமதியை அதானி குழுமம் பெற்றது. இந்நிலையில் இத்திட்டத்தைத் தடுக்க அமெரிக் காவின் சான்ட்லர் அறக்கட்டளை ஆஸ்திரேலியாவில் செயல்படும் சுற்றுச் சூழல் குழுக்களுக்கு நிதி உதவி அளித்து இத்திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சுரங்க திட்டம் அமைய உள்ள பகுதியில் வாழும் பழங்குடியி னரின் (வாங்கன் மற்றும் ஜகலிங் கோ) கல்வி மேம்பாடு, பொருளா தார மேம்பாட்டுக்கான நடவடிக் கைகளை ஆஸ்திரேலிய தன்னார்வ குழு மேற்கொண்டு வந்தது.

இத்திட்டத்துக்கு தேவையான நிதி அளிப்பதாகவும், அதேசமயம் அதானி சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தன்னார்வ குழுவுக்கு நிதி உதவி அளிக்கும் விவகாரம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் துக்குக் கூட தெரிவிக்காமல் ரகசியமாக அளிக்கப்பட்டிருப்ப தாக விக்கிலீக்ஸ் தகவலை வெளி யிட்டுள்ள ``தி ஆஸ்திரேலியன்’’ நாளிதழ் தெரிவிக்கிறது. இந்தத் திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் அந்த தன்னார்வ குழுக்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை அந்தஸ்து தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதம் எதிர்த்த மனித உரிமைக் குழுவுக்கு அறக்கட் டளை அந்தஸ்து அளிக்கப்பட்ட தாகவும் இதற்கென சிறப்பு நாடா ளுமன்ற தீர்மானத்தை தொழி லாளர் கட்சி அரசு கொண்டு வந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி சுரங்க திட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு சன்ரைஸ் திட்டம் என பெயரிடப்பட்டு செயல்படுத் தப்பட்டுள்ளது. தன்னார்வ குழுக் கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்த எதிர்ப்புக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா வில் இயங்கும் சான்ட்லர் அறக்கட்டளை இணையதளம் மூலம் நன்றி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in