

புதுடெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் இண்டேன் காஸ் சிலிண்டர் பதிவு மற்றும் விநியோகம் செய்வதில் கடந்த 2 நாட்களாக பிரச்சினை இருந்தது வந்தது. இந்தநிலையில் தற்போது பிரச்சினை சரி செய்யப்பட்டு வருகிறது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைமைப் பொது மேலாளர் சந்தீப் சர்மா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய ஐபிஎம் மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பயனாளர்கள் வழக்கம்போல் தங்களது காஸ் சிலிண்டர் பதிவை
வாடிக்கையாளர்களின் பதிவு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கூடிய விரைவில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். செவ்வாய்க்கிழமை மாலைக்குள் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு புதன்கிழமை முதல் வழக்கம் போல் சேவைகள் தொடரும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.