

இந்த ஆண்டு அமெரிக்காவில் வட்டி உயர்த்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதால் நேற்று இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந் தித்தன. தவிர முக்கிய நிறுவனங் களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் மந்தமாக இருப்பது, சீனா ஏற்றுமதி சரிவு தகவல்கள் ஆகியவை காரணமாகவும் சந்தைகள் சரிந்தன.
சென்செக்ஸ் 439 புள்ளிகள் சரிந்து 27643 புள்ளியில் முடிவ டைந்தது. கடந்த ஜூலை 11-ம் தேதி நிலையில் சென்செக்ஸ் வர்த்தகமானது. நிப்டி 135 புள்ளிகள் குறைந்து 8573 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்த கத்தின் இடையே ஆகஸ்ட் 11-ம் தேதி நிலையை தொட்டது.
ஐடி குறியீட்டை தவிர அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிவடைந்தன. குறிப்பாக வங்கித்துறை குறியீடு அதிக பட்சமாக 2.18 சதவீதம் சரிந்தது. அதனை தொடர்ந்து ரியால்டி (2.17%), மெட்டல் (1.9%1), கன்ஸ் யூமர் டியூரபிள் (1.88%) ஆகிய துறைகள் சரிந்தன. ஐடி குறியீடு 0.18 சதவீதம் உயர்ந்தது. தவிர மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் சரிந்து முடிந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் அதானி போர்ட்ஸ் (-4.68%), ஹெச்டிஎப்சி (-3.83%), ஐசிஐசிஐ வங்கி (-3.56%) மற்றும் டாடா மோட்டார்ஸ் (-3.17%) ஆகிய பங்குகள் அதிகம் சரிந்தன. மாறாக இன்போசிஸ். ஓஎன்ஜிசி, மாருதி, சிப்லா மற்றும் ஹீரோமோட்டோ கார்ப் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.
ரூபாய் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைந்திருக்கிறது. வர்த்தகத்தின் இடையே 43 பைசா சரிந்து ஒரு டாலர் 66.96 ரூபாயாக வர்த்த கமானது. முடிவில் ஒரு டாலர் 66.93 ரூபாயாக முடிவடைந்தது.
சீனா ஏற்றுமதி சரிவு
சீனாவின் செப்டம்பர் மாத ஏற்றுமதி 10 சதவீதம் அள வுக்கு சரிந்திருக்கிறது. சந்தை எதிர்பார்த்தை விடவும் ஏற்றுமதி சரிந்திருக்கிறது. அதேபோல சீனாவின் இறக்குமதியும் 1.9 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. சீனா விஷயம் நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப் பட்டதுதான். இதனால் சந்தை சரியும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் காலாண்டு முடிவு களை பொறுத்து சந்தை இருக் கும் என ஐடிபிஐ கேபிடல் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஏ.கே.பிரபாகர் தெரிவித்தார்.