

அமெரிக்காவைச் சேர்ந்த புரூடென்ஷியல் பைனான்ஸியல் (பிஎப்ஐ) நிறுவனம் டிஹெச்எப்எல் பிரமெரிக்கா லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தனது பங்கினை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தியுள்ளது. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஹெச்எப்எல் மற்றும் அந்த நிறுவனத்தின் புரமோட்டர் குழுமங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் 51 சதவீத பங்குகளை காப்பீட்டு நிறுவனத்தில் வைத்துள்ளன.
இந்த இணைப்பு மூலம் நிறுவனம் பலமடைந்திருக்கிறது. இந்திய குடும்பங்களுக்கு தேவையான ஆயுள் காப்பீட்டினை வழங்க முடியும். தொடர்ந்து புதுமையான புராடக்ட்களை உருவாக்கு வோம் என டிஹெச்எப்எல் நிறுவனத்தின் கபில் வாத்வான் தெரிவித்தார்.
பிஎப்ஐ-யின் ஆசிய பிரிவு தலைவர் ஜன் வன் டென் பெர்க் கூறும் போது கடந்த எட்டு ஆண்டுகளாக டிஹெச்எப்எல் பிரமரிக்கா நிறுவனம் பலமாகவும் லாபமடைந்தும் வருகிறது. அடுத்த கட்ட வளர்ச்சிக்கு திட்டமிட்டிருக்கிறோம் என்றும் கூறினார்.