

இந்தியாவுக்கு எட்டு சதவீத பொரு ளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அதற்கு அந்நிய முதலீடு தேவை என்று நிதிச்செயலாளர் அர்விந்த மாயாராம் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சி 5 சதவீதத் துக்கும் கீழே இருக்கிறது. இந்த வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் அந்நிய முதலீடு தேவை. வளர்ச்சியை அதிகரிப்பதற்கு முத லீடு தேவை. ஆனால் அந்த முதலீட்டை உள்நாட்டில் திரட்ட முடியாது. அந்நிய முதலீடுதான் தேவை.
இருந்தாலும் அந்நிய நிறுவன முதலீட்டை (எஃப்.ஐ.ஐ.) விட அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ.) வழியாக முதலீடு வருவதே சிறந்ததாக இருக்கும் என்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்தார்.
கட்டுமானத்திட்டங்களுக்கு ஒரு டிரில்லியன் டாலர் தேவைப் படுகிறது. இதற்கு அந்நிய முதலீடு தேவைப்படும். மேலும் அந்நிய முதலீடு குறையும்போது, வர்த்த கப்பற்றாக்குறை அதிகரிக்கும்; ரூபாயின் மதிப்பு சரியும்.
கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது அந்நிய முதலீட்டில் 8 சதவீத வளர்ச்சி இருந்தது. 2012-13ம் நிதி ஆண்டில் 2,242 கோடி டாலராக இருந்த அந்நிய முதலீட்டு கடந்த நிதி ஆண்டில் 2,429 கோடி டாலராக உயர்ந்தது.
அந்நிய முதலீட்டைக் கவர் வதற்காக, பாதுகாப்பு, ரயில்வே மற்றும் கட்டுமான துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை தளர்த்துவதற்கு மத்திய அரசு யோசித்து வருகிறது.
இரு நாடுகளிடையே ஒப்பந்தம் போடுவதினால் மட்டுமே அந்நிய முதலீடு வந்துவிடாது, இந்தியா வில் லாபம் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே முதலீடு வரும். வாய்ப்புகள் எப்போது வரும் என்றால் இந்தியா வளர்ச்சி பாதையில் இருக்கும் போது மட்டுமே என்று அவர் தெரிவித்தார்.