Published : 02 Sep 2022 03:00 AM
Last Updated : 02 Sep 2022 03:00 AM

2022 ஏப்ரல் 1 - ஜூலை 31 வரை சுமார் 3.7 கோடி நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை

புதுடெல்லி: நடப்பாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையில் சுமார் 3.7 கோடி நகை ஆபரணங்களுக்கும், கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் 8.68 கோடி நகை ஆபரணங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய தரநிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி அனைத்து தங்க நகை ஆபரணங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் 43 ஆயிரத்து 153 தங்க நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டதிலிருந்து ஆகஸ்ட் 1, 2022 ல் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 497 தங்க நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தங்க நகை ஆபரணங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த துறையில் சில குறிப்பிட்டத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. அவை:

  • நகை வியாபாரிகளுக்கான பதிவு இலவசமாக்கப்பட்டு, ஆயுட் காலத்திற்கு செல்லுபடியாக மாற்றப்பட்டது
  • கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஹால்மார்க் தனித்துவ அடையாளத்தின் கீழ் ஹால் மார்க் இணையம் தொடங்கப்பட்டது. அந்த இணையம் மூலம் தங்க நகைகளுக்கான மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு ஆன்லைன் ஆக்கப்பட்டன.
  • கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி 948 ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையத்திலிருந்து 2022-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி 1,220 மையமாக உயர்ந்துள்ளது.
  • ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்ட தங்க நகை ஆபரணங்களின் தரத்தை ‘verify HUID’’ என்ற செயலி மூலம் சோதனை செய்யும் நடைமுறை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அமலுக்கு வந்தது

இந்திய தரநிர்ணய அமைப்பின் www.bis.gov.in.என்ற இணைய தளத்தில் 288 மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அதிக மாவட்டங்களின் தகவல்களை, இந்த இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x