Published : 01 Sep 2022 10:12 PM
Last Updated : 01 Sep 2022 10:12 PM

ஆகஸ்ட் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் வாகன விற்பனை 4,62,608 ஆக உயர்வு

(கோப்புப்படம்)

புது டெல்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை 4,62,608 என உயர்ந்துள்ளது. இதனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிட்டு அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருந்தாலும் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை இந்த முறை சரிந்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வரும் பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன.

கடந்த 2021 ஆகஸ்ட் வாக்கில் மொத்தம் 4,53,879 வாகனங்களை விற்பனை செய்துள்ளது ஹீரோ. கடந்த ஆண்டு ஆகஸ்ட் உடன் ஒப்பிடும்போது உள்நாட்டு விற்பனை இம்முறை அதிகரித்துள்ளதாம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை சார்ந்த வளர்ச்சியில் 4.55 சதவீதம் ஏற்றம் காணப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 22,742 என்ற எண்ணிக்கையிலிருந்து 11,868 என வெளிநாட்டு ஏற்றுமதி சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் மொத்தம் 4,30,799 மோட்டார் சைக்கிளை ஹீரோ விற்பனை செய்துள்ளது. 31,809 ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வரும் மாதங்களில் பண்டிகை நாட்கள் வரவுள்ள காரணத்தால் விற்பனையின் வளர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஹீரோ கணித்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பண்டிகை கொண்டாட்டங்கள் வழக்கத்திற்கு திரும்பும் என ஹீரோ எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x