

உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்வா எகோ 3ஜி என்ற பெயரிலான இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ. 2,400 ஆகும்.
3-ஜி அலைக்கற்றையில் செயல்படக் கூடிய 4 அங்குல தொடு திரையைக் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. டியூயல் கோர், மீடியாடெக் சிப்செட் பிராசஸர், 256 எம்பி ராம் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும். இதன் நினைவகத்தை 32 ஜிபி வரை விரிவாக்கிக் கொள்ளலாம்.
ஸ்மார்ட்போனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மிகக் குறைந்த விலையில் இது அறிமுகப்படுத்தப்பட்டதாக நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் தலைவர் உன்னிகிருஷ்ணன் மோகன்தாஸ் கூறியுள்ளார்.
இரட்டை சிம் வசதி, 0.3 எம்பி கேமிரா, டியூயல் எல்இடி பிளாஷ் ஆகியன இதில் உள்ளன.
இது கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய கண்கவர் வண்ணங்களில் அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.