

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத் தின் நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.494 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.411 கோடி யாக இருந்தது.
மொத்த வருமானம் ரூ.3,489 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.3,089 கோடி யாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டின் அரையாண்டில் நிகர லாபம் 13.7 சதவீதம் உயர்ந்து ரூ.902.60 கோடியாக இருக்கிறது. அதேபோல அரையாண்டில் மொத்த வருமானம் ரூ.6,816 கோடியாக இருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தில் ஒரு சதவீதம் சரிந்து ரூ.608-ல் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.