ரிலையன்ஸ் மொத்த நிகர லாபம் ரூ.7,833 கோடி

ரிலையன்ஸ் மொத்த நிகர லாபம் ரூ.7,833 கோடி
Updated on
1 min read

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.7,704 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.6,534 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த நிகர லாபம் 24 சதவீதம் சரிந்து ரூ.7,833 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.10,314 கோடியாக இருந்தது.

மொத்த வருமானம் ரூ. 66,198 கோடியில் இருந்து ரூ.66,624 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்வதற்கு கிடைக்கும் தொகை 10.10 டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 10.60 டாலர் கிடைத்தது. கடந்த ஜூன் காலாண்டில் ஒரு பேரல் சுத்திகரிப்பதற்கு 11.5 டாலர் கிடைத்தது.

நிறுவனத்தின் வசம் 1,240 கோடி டாலர் ரொக்கம் இருக்கிறது. நிறுவனத்தின் கடன் 2,840 கோடி டாலராகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in