

உலக வங்கியில் இந்தியாவின் முதலீட்டு அளவை அதிகரிக்க தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். கனடாவிலிருந்து வாஷிங்டன் வந்த அவர் உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம்-மை சந்தித்துப் பேசினார். அப்போது உலக வங்கி தற்போது கடைப்பிடித்து வரும் டைனமிக் பார்முலாவின் படி உலக வங்கி யில் நாடுகளின் முதலீட்டு அளவை நிர்ணயிப்பதை விட கூடுதல் முதலீடு செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார்.
ஒவ்வொரு நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளிட்டவை அடிப்படையில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதைக் கணக்கிடுவதுதான் டைனமிக் பார்முலாவாகும். ஒவ் வொரு நாடும் எத்தனை சதவீதம் பங்களிப்பு செய்துள்ளதோ அதனடிப்படையில் வாக்குரிமை யும் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தியாவில் சில குறிப்பிட்ட துறைகளில் வளர்ச்சி எட்டப்பட்ட தில் உலக வங்கியின் பங்கு அளப்பரியது என்று சுட்டிக் காட்டிய ஜேட்லி, தற்போது டைனமிக் பார் முலா அடிப்படையில் இந்தியா மேற்கொண்டுள்ள முதலீட்டை விட கூடுதலாக முதலீடு செய்யவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
உலக வங்கியின் குழுவினர் உறுப்பு நாடுகளுடன் இணைந்து நிதிப் பிரச்சினைகளுக்கு புதிய அணுகுமுறைகளை உருவாக்க முற்பட வேண்டும் என்று ஜேட்லி வலியுறுத்தியதாக உலக வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேட்லியை காமன்வெல்த் செயலர் பாட்ரிசியா ஸ்காட்லாந்தும் மரியாதை நிமித்தமாக சந்தித் தார். பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் ஜேட்லி உரையாடினார்.