

பண்டிகை நாட்கள் தொடர்ச்சியாக வரவுள்ள நிலையில், இதற்காக இந்திய நுகர்வோர்கள் ரூ.25 ஆயிரம் கோடி செலவழிப்பார்கள் என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் கணித்துள்ளது. கடந்த ஆண்டில் செலவு செய்துள்ள தொகையை விட கூடுதலாக 25% செலவு செய்வார்கள் என்று எதிர் பார்ப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இந்த பண்டிகை காலகட் டத்தில் 20 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இன்று தொடங்கும் நவராத்திரி பண்டிகையுடன் இந்த பண்டிகை காலம் தொடங்குகிறது.
இந்திய இ-காமர்ஸ் நிறுவனங் களில் இதுவரை இல்லாத அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்ப் பதாகவும் அசோசேம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வுக்காக இந்தியா முழுவதும் 10 முக்கிய நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி-என்சிஆர், ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கொத்தா, லக்னோ நகரங் களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 வயது முதல் 40 வயதுக் குள்பட்ட 2,500 நபர்களிடம் கருத்து கேட்டறிந்துள்ளது.
இந்த பண்டிகை காலத்தில் இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் பரபரப்பாக இருக்கும் என்றும், நுகர்வோர் கடந்த ஆண்டு செலவழித்த 20 ஆயிரம் கோடியை விடவும் கூடுதலாக 25 சதவீத தொகையை செலவழிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் அசோசேம் அமைப்பின் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறினார்.
சுமார் 60 சதவீத நுகர்வோர்கள் பொருட்களுக்கான பட்டியலுடன் தயாராக உள்ளனர் என்றும், பொதுவாக கடைகளில் நீண்ட நேரம் நின்று வாங்குவதைவிட ஆன்லைன் நிறுவனங்களில் வாங்க முன்னுரிமை கொடுப்பதாகவும் கூறியுள்ளது. இ-டெய்ல் நிறுவனங்கள் அழகுசாதனப் பொருட்கள், ஆபரணங்கள், செல்போன்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை ஆன்லைன் நிறுவனங்களின் தள்ளுபடிகளில் வாங்க தயாராக உள்ளனர்.
வாங்குவதற்கு எளிதான நடைமுறை, டெலிவரி வசதிகள், பணம் செலுத்துவதற்கு உள்ள பல வழிகள், சிறந்த சலுகைகளின் காரணமாக ஆன்லைன் நிறுவனங் களில் வாங்க விரும்புகின்றனர். நவராத்திரியை அடுத்து தசரா, தீபாவளி, அதைத் தொடர்ந்து புத் தாண்டு, பொங்கல் என அடுத் தடுத்து பண்டிகைகள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.