

என்எஸ்டிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
ஐடிபிஐ பெடரல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும், ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர்.
நிதிச் சேவை துறையில் பல்வேறு பிரிவுகளில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய தலைமை பொறுப்புகளை வகித்தவர்.
ஐடிபிஐ கேபிடல் மார்க்கெட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தவிர ஐடிபிஐ வங்கியில் பல முக்கிய பொறுப்புகளை கையாண்டவர். பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்த குழுவில் இவரும் ஒருவர்.
அகமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டம் பெற்றவர். பட்டய கணக்காளர் பயிற்சி மற்றும் காஸ்ட் அக்கவுன்டண்ட் பயிற்சி பெற்றவர்.