

தனியார் வங்கியான ஜம்மு காஷ்மீர் வங்கி ஒரு பங்குக்கு பத்து பங்குகளை வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திக்கிறது. 10 ரூபாய் முக மதிப்பு இருக்கும் பங்குகளை ஒரு ரூபாய் முக மதிப்பு இருக்கும் பங்குகளாக மாற்ற இருக்கிறது.
வர்த்தகத்தில் அதிக புழக்கத்தை ஏற்படுத்த வசதியாக இதை அறிவித்திருக்கிறது வங்கியின் இயக்குநர் குழு. இதற்கான முடிவினை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி நடக்க இருக்கும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்கள் ஒப்புதல் பெற்றவுடன் முடிவு எடுக்கப்படும்.
இப்போதைக்கு நிறுவனர்களின் பங்கு 53.17 சதவீதமும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 28.22 சதவீத பங்குகளும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 4.47 சதவீத பங்குகளும் உள்ளன. இதர முதலீட்டாளர்கள் 14.14 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
இந்த பங்கின் வர்த்தகம், வர்த்தகத்தின் முடிவில் 0.45 சதவீதம் உயர்ந்து 1,629.65 ரூபாயில் முடிந்தது.