

கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 11.2 சதவீதம் சரிந்து ரூ.126 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.142 கோடியாக நிகர லாபம் இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 2.6 சதவீதம் உயர்ந்து ரூ.1,610 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,570 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.96 சதவீதத்தில் இருந்து 2.29 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல நிகர வாராக்கடனும் 0.96 சதவீதத்தில் இருந்து 1.44 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
வங்கியின் மொத்த வணிகம் ரூ.90,000 கோடியை எட்டி இருக் கிறது. டெபாசிட் ரூ.52,002 கோடி யாகவும், கடன் ரூ.39,537 கோடி யாகவும் இருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.39 சதவீதத் தில் இருந்து 3.61 சதவீதமாக உயர்ந் திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் நிகர லாபம் ரூ.272.66 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டி லும் ரூ.276.80 கோடியாக இருந் தது. நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 4.91 சதவீதம் சரிந்தது.