Last Updated : 09 Oct, 2016 11:51 AM

 

Published : 09 Oct 2016 11:51 AM
Last Updated : 09 Oct 2016 11:51 AM

நீர்மின் திட்டங்களை ஊக்குவிக்க புதிய கொள்கை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு

நீர்மின் திட்டங்களை ஊக்குவிக்க அரசு புதிய கொள்கையை விரைவில் அறிவிக்க உள்ளது. மரபு சாரா எரிசக்தி திட்டங்களான காற்றாலை மற்றும் சூரிய மின்னுற்பத்தி போன்ற திட்டங் களுக்கு அளிக்கப்படும் சலுகையைப் போல நீர் மின்னுற்பத்தித் திட்டங்களுக்கும் அளிப்பது தொடர்பான புதிய கொள்கையை அரசு விரைவில் வெளியிட உள்ளது என்று அவர் கூறினார்.

முடங்கியுள்ள மின் திட்டப் பணிகளை முடுக்கி விடவும் மற்ற மரபு சாரா மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு சலுகை அளிப்ப தற்காகவும் புதிய கொள்கை வகுக்கப்படுகிறது. அதன்படி 25 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு இச்சலுகையை வழங்க முடிவு செய்துள்ளதாக கோயல் கூறினார்.

இது தொடர்பாக மின்னுற் பத்தியாளர்கள், மின்சாரத்தைப் பயன்படுத்தும் மாநில அரசு களுடன் பேச்சு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

25 மெகாவாட் வரையிலான மின்னுற்பத்தித் திட்டங்களை சிறிய திட்டங்களாக வகைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்தகைய சிறிய நீர் மின்னுற்பத்தித் திட்டங்களுக்கு ஏற்கெனவே காற்றாலை மற்றும் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் கிடைக்கும்.

இந்தியாவில் 150 ஜிகாவாட் வரை நீர்மின்னுற்பத்திக்கான வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் இதில் 50 ஜிகாவாட் அருணாசலப் பிரதேசத்திலிருந்து மட்டும் கிடைக்கிறது என்றார்.

12- வது திட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மின்னுற்பத்தி இலக்கில் கூடுதலாக 4,371 மெகாவாட் மின்னுற்பத்தி சாத்தியமாகாது என்று குறிப்பிட்ட அவர் மொத்த மின்னுற்பத்தி இலக்கு 10,897 மெகாவாட் என்றார்.

மரபு சாரா மின்னுற்பத்தி இலக்கு 2022-ம் ஆண்டில் 225 ஜிகாவாட்டாக இருக்கும். இதில் நீர்மின்னுற்பத்தியும் சேர்க் கப்பட்டால் இந்த இலக்கை எட்ட முடியும். சர்வதேச அளவில் நீர்மின்னுற்பத்தியும் மரபு சாரா எரிசக்தி பட்டியலில் இடம்பெற்றது என்று கோயல் சுட்டிக் காட்டினார்.

இந்தியாவில் மட்டும்தான் 25 மெகாவாட்டுக்குக் குறைவான மின்னுற்பத்தி திட்டங்கள் சிறு, குறுந்தொழில் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக பொது மக்களின் கருத்துகளைக் கேட்க வும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாக கோயல் குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலம் வதோதரா வில் கடந்த 6-ம் தேதி தொடங் கிய ஸ்விட்ச் எக்ஸ்போ 2016 - நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக பியூஷ் மூன்று நாள்களாக குஜராத்தில் முகாமிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x