ஹீரோ மோட்டோகார்ப் ரூ.205 கோடி முதலீடு

ஹீரோ மோட்டோகார்ப் ரூ.205 கோடி முதலீடு
Updated on
1 min read

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ரூ.205 கோடியை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான அதெர் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு துறை மேம்படும் என்றும், எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு முயற்சிகளில் அதெர் எனர்ஜி நிறுவனத்துடனான கூட்டு தொடரும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூறியுள்ளது.

அதெர் நிறுவனம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவன மாகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு துறையில் ஈடுபட்டுள்ளது. தவிர எலெக்ட்ரிக்கல் வாகனங்கள் சார்ந்த சார்ஜிங் தொழில்நுட்ப பணிகளை யும் மேற்கொண்டுள்ளது.

நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உத்தி ரீதியான முதலீடு என்றும், இந்த பரிவர்த்தனையின் தன்மைக்கு ஏற்ப சில விதிமுறைகளை முடிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இதற்கான அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அதெர் நிறுவனத்தின் 26 முதல் 30 சதவீத பங்குகள் ஹீரோமோட்டோ கார்ப் வசம் வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும். சுற்றுச்சூழல் மற்றும் வாடிக்கை யாளர்கள், தொழில்துறை சார்ந்து பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வரு கிறோம் என்று ஹீரோ மோட்டோ கார்ப் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in