நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது இந்தியன் வங்கி

நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது இந்தியன் வங்கி
Updated on
1 min read

சென்னை: ரூ.2 கோடிக்கு குறைவான நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதம் குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம். இது தொடர்பான அறிவிப்பு இந்திய வங்கியின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு குறிப்பிட்ட சில நிரந்தர வைப்புத் தொகைக்கு மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5 ஆண்டுகள் வரை அல்லது அதற்கும் மேலான ஆண்டுக்கு மெச்சூரிட்டி கொண்ட டெபாசிட்களுக்கு 5 முதல் 15 வரையிலான பேஸிஸ் பாயிண்ட்ஸ்களாக (BPS) வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி ஓராண்டு மெச்சூரிட்டி கொண்ட வைப்புத் தொகை 5.30% இருந்து 5.45% உயர்ந்துள்ளதாம். அதே போல ஓராண்டுக்கு மேல் இரண்டாண்டுக்கு கீழ் மெச்சூரிட்டி கொண்ட வைப்புத் தொகை மீது 10 BPS புள்ளிகளும், இரண்டு முதல் மூன்றாண்டுக்கு கீழ் மெச்சூரிட்டி கொண்ட வைப்புத் தொகை மீது 5 BPS புள்ளிகளும், மூன்று முதல் ஐந்தாண்டுக்கு கீழ் மெச்சூரிட்டி கொண்ட வைப்புத் தொகை மீது 15 BPS புள்ளிகளும், 5 அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் மெச்சூரிட்டி கொண்ட வைப்புத் தொகை மீது 5 BPS புள்ளிகளும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வட்டி விகிதம் புதிய வைப்புத் தொகை மற்றும் மெச்சூரிட்டி அடைந்த பிறகு புதுப்பிக்கப்படும் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in