கிரிப்டோகரன்சியில் 11.5 கோடி இந்தியர்கள் முதலீடு: எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் தகவல்

கிரிப்டோகரன்சியில் 11.5 கோடி இந்தியர்கள் முதலீடு: எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் தகவல்
Updated on
1 min read

சுமார் 115 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக தீவு நாடான சீசெல்ஸ் நாட்டில் இயங்கி வரும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான KuCoin ஆய்வின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. வரும் 2030 வாக்கில் இந்தியர்களின் முதலீடு ரூ.1,900 கோடியாக இருக்கும் எனவும் மதீப்பீட்டளவில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு இதற்கு வரி விதிக்கப்படும் என அறிவித்து, அதனை கடந்த ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது. அதன் காரணமாக இந்திய நாட்டில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களின் வர்த்தகம் சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இந்த வரி விவகாரத்தினால் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ள இந்தியர்கள், தங்களது முதலீட்டை இந்திய எக்ஸ்சேஞ்ர்களிடமிருந்து சர்வதேச அளவில் இயங்கி வரும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களுக்கு மாற்றி வருவதாகவும் சில செய்து செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆய்வு முடிவு தகவல்கள்:

  • இந்தியாவில் 18 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளனர்.
  • சுமார் 11.5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர்.
  • பாதுகாப்பு குறித்து 49 சதவீத முதலீட்டாளர்களுக்கு அச்சம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முதலீட்டாளர்களில் 54 சதவீதம் பேர் பெரிய அளவில் இந்த முதலீட்டின் ஆதாயம் பெறலாம் என எண்ணி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு அரசின் வரி விதிப்பு கவலையை கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை கடந்த அக்டோபர் 2021 முதல் ஜூன் 2022 வரையில் இந்தியர்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளது KuCoin.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in