யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டமில்லை: மத்திய நிதி அமைச்சகம் உறுதி

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டமில்லை: மத்திய நிதி அமைச்சகம் உறுதி
Updated on
1 min read

டிஜிட்டல் முறையில் செலுத்தப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என நிதி அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.

யுபிஐ சேவை நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனைக்கு ஒன்றுஅல்லது இரண்டு பைசா மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றன. இதனால், சேவை நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகிஉள்ளன. எனவே, செயல்பாட்டுசெலவினங்களை சமாளிக்கும் வகையில் நெப்ட் மற்றும் ஐஎம்பிஎஸ் உள்ளிட்டவற்றின் வாயிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படுவது போல யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பது அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆலோசனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜிபே உட்பட யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் வரப்போகிறது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இது குறித்து மத்திய நிதிஅமைச்சகம் தனது நிலைப்பாட்டினை தெளிவுப்படுத்தியுள்ளது.

இது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

யுபிஐ டிஜிட்டல் சேவை பொது மக்களின் நன்மை, வசதி மற்றும் பொருளாதார உற்பத்தித் திறன் ஆதாயங்களுக்கான பொது பயன்பாட்டு தளமாகும். மக்களின் பொது சேவைக்கான பயன்பாட்டின் மீது கட்டணங்களை விதிப்பது தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசின் பரி சீலனையில் இல்லை.

யுபிஐ சேவை நிறுவனங்கள் கட்டண விதிப்புக்கு பதிலாக, தங் களது செலவினத்தை ஈடு செய்ய மாற்று திட்டங்களின் மூலம் நிதி உருவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த் தனையை ஊக்குவிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு பல்வேறுநிதி உதவி திட்டங்களை வழங்கியது. அதேபோன்றுஇந்த ஆண்டும் பொருளாதாரத்தில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் தளத்தை மேலும் விரிவுபடுத்தவும், ஊக்குவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in