

காதி நிறுவனம் தங்களது பொருட் களை ஆன்லைன் மூலம் விற்கும் நோக்கில் புதிய இணையதளத்தை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் தொடங்க இருக்கிறது.
இ-காமர்ஸ் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், காதி பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் இ-காமர்ஸ் துறை மூலம் காதி விற்பனையை அதிகப்படுத்த இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
``அடுத்த மாதம் இந்த இணைய தளம் தொடங்கப்படும். விலைப் பட்டியல், பொருட்களின் புகைப்படங்கள் மற்றும் கூரியர் ஒப்பந்தம் உட்பட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டோம்’’ என்று காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தின் தலைவர் வி.கே.சக்சேனா தெரிவித்தார்.