

எப்எம்சிஜி துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் நிகர லாபம் 11.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,095 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.982 கோடியாக இருந்தது.
மொத்த வருமானம் 1.57 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.8,348 கோடியாக இருந்தது. இப்போது ரூ.8,480 கோடியாக உயர்ந்திருக்கிறது. சவாலான சந்தையிலும் கூட நிறுவனம் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக தலைவர் ஹரீஷ் மன்வாணி தெரிவித்தார்.
பருவமழை சிறப்பாக இருக் கும் என்ற எதிர்பார்ப்பு இருப்ப தால், விற்பனையில் முன்னேற்றம் இருக்கும் என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பிபி பாலாஜி தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 10.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,269 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.2,051 கோடியாக இருந்தது. மேலும் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.7 வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.