

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்பட்டுவந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த ஆகஸ்ட் 14 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவை அடுத்து, பிரதமர் மோடி தொடங்கி, புதிதாக பங்குச் சந்தையில் முதலீட்டில் நுழைந்துள்ள இளைய தலைமுறையினர் வரையில் அவரது பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தனர்.
ஏன்? அவர் ரூ.46 ஆயிரம் கோடி சொத்துமதிப்பைக் கொண்ட இந்திய பில்லியனர் என்ற காரணத்தினாலா? நிச்சயமாக இல்லை. இவ்வளவு சொத்தையும் அவர் பங்குச் சந்தை முதலீடு வழியாகவே உருவாக்கினார் என்பதனால்தான் அவர் பேசப்படலானர்.
1985-ல் ரூ.5,000-த்தைக் கொண்டு பங்குச் சந்தை முதலீட்டை தொடங்கினார் ஜுன்ஜுன்வாலா. இன்று அவரது பங்குகளின் மதிப்பு ரூ.32,000 கோடி. இந்த வளர்ச்சி, இந்த மாயாஜாலம்தான் அவரை பங்குச் சந்தை உலகில் நாயகனாக நிலைநிறுத்தியது...
நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர் பெரும் முதலீடுகளைக் கொண்டிருந்தார். உச்சபட்சமான முதலீடு டாடா நிறுவனத்தில்தான். டைட்டன் (ரூ.11,083 கோடி), ஸ்டார் ஹெல்த் (ரூ.7,014 கோடி), மெட்ரோ பிராண்ட்ஸ் (ரூ.2,232 கோடி), டாடா மோட்டார்ஸ் (ரூ.1,857 கோடி), ஃபெடரல் பேங்க் (ரூ.848 கோடி), கிரைஸில் (ரூ.900 கோடி), இண்டியன் ஹோட்டல்ஸ் (ரூ.819 கோடி), கரூர் வைசியா வங்கி (ரூ.230 கோடி) ஆகிய நிறுவனங்களில் அவரது பங்கு கணிசமானது.
‘ஒரு நிறுவனம் அதன் தகுதிக்கு மீறி அதிக மதிப்பைப் பெறும்பட்சத்தில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.’ இதுதான் பங்குச் சந்தை முதலீடு சார்ந்து அவர் கொண்டிருந்தத் தத்துவம்.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்