

பேர்ல் ஹியூமன் கேர் நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த ஹென்றி போர்ட் ஹெல்த் சிஸ்டத்துடன் இணைந்து வேலூரில் சிறப்பு மருத்துவமனை தொடங்க இருக்கிறது. ரூ.330 கோடி முதலீட் டில் 3 ஏக்கரில் இந்த மருத்து வமனை அமைய இருக்கிறது. 2019-ம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனை செயல்பட தொடங்கும் என்று அறிக்கப்பட் டிருக்கிறது.
ஹென்றி போர்ட் ஹெல்த் சிஸ்டம் மருத்துவமனை அமைப்பு, நோயாளிகளை கவனிப்பது, தகவல்களைப் பராமரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் தங்களுடைய அனுபவத்தைக் கொடுக்கும்.
பேர்ல் ஹியூமன் நிறுவனம் தினசரி நடவடிக்கைகளை மேற் கொள்ளும் என அதன் தலைவர் ஜி.வி சம்பத் தெரிவித்தார். மேலும் வேலூரில் இருக்கும் மருத்துவ வசதி போதுமானதாக இல்லை. வேலூர் மற்றும் அதன் 100 கிலோமீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் உயர் சிகிச்சைக்காக சென்னை அல்லது பெங்களூருக்கு செல்கின்றனர். இதன் காரணமாகவே வேலூரில் இந்த மருத்துவமனையை அமைக்க திட்டமிட்டோம். மற்ற நகரங்களிலும் இதுபோன்ற மருத்துவமனைகளை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று கூறினார்.